Saturday, September 5, 2009

Wednesday, September 2, 2009

தீராத ஏக்கம் எப்போது தீரும்?



இலங்கை அணிக்கோ தனது சொந்த மண்ணில் டிவன்டி-20 வெற்றிக்கான கதவுகள் இன்னும் திறக்கப்படவில்லை.



ஆமாம் இதுவரையில் இலங்கை அணி தனது சொந்த மண்ணில் 3 டிவன்டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் முhலாவது வெற்றியை பார்த்து இரசிக்கவேண்டும் என்ற ஏக்கம் இலங்கை இரசிகர்களிடையே தொடர்ந்த வண்ணமேயுள்ளது.

கடந்த டிவன்டி-20 உலககிண்ண போட்டியில் ஒரு போட்டியிலேனும் தோல்வியுறாது இறுதி போட்டிவரை முன்னேறிய இலங்கை அணிக்கோ தமது சொந்த மண்ணில் டிவன்டி-20 போட்டியொன்றில் வெற்றியை பெறுவதென்பது எட்டாக்கணியாகவேயுள்ளது.



டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிற்பாக செயல்பட்டு வரும் இலங்கை அணி டிவன்டி-20 போட்டிகளிலும் சிறப்பாகவே விளையாடி வருகின்றது. எனினும் தாயகததில் அவர்களின் இரசிகர்கள் மத்தியில் விளையாடி முதலாவது வெற்றிக்காக இலங்கை போராடி வருகின்றமை நன்கு புலப்படுகின்றது.

டிவன்டி-20 போட்டிகளை பொறுத்தவரையில் ஒரு சிறு தவறுசெய்தாலும் அது போட்டியையே திசைதிருப்பிவிடும், டிவன்டி-20 போட்டிகளில் விடும் சிறு சிறு தவறுகளும் போட்டியின் முடிவையே மாற்றிய பல சந்தர்ப்பங்களை நாம் கண்டுள்ளோம்.

உதாரணமாக நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாது டிவன்டி-20 போட்டியில் 20 வது ஓவரின் கடைசி பந்தை நியூசிலாந்து வீரர் அடிக்கமுயள அது விக்கட்காப்பாளரின் கைளுக்கு செல்ல துடுப்பாட்ட வீரர்கள் ஓட்பெற முயற்சித்து ஓடினர் அவர்களை ரன்அவுட் செய்வதற்காக பந்தை எறிந்தார் விக்கட்காப்பாளர் குமார் சங்ககார.


அந்த பந்து விக்கட்டில் படாமல் எதிரே இருந்த களத்தடுப்பாளரையும் தான்டி செல்லவே அந்த பந்தில் மூன்று ஓட்டங்கள் பெறப்பட்டது. இந்த போட்டியிலும் இலங்கை அணி மூன்று ஓட்டங்களாலேயே தோல்வியடைந்தது.

ஆக இறுதி பந்தில் அந்த தவறிழைக்கப்படாவிட்ருந்தால் பெரும்பாலும் இலங்கைஅணி இந்த போட்டியில் வெற்றிபெற்றிருக்கும் ஆக சிறு தவறும் போட்டியின் முடிவை மாற்றும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.



இது போக அண்ணிய மண்ணில் டிவன்டி-20 போட்டிகளில் சிறப்பாக செயல்படும் இலங்கை தமது சொந்த மண்ணில் சோடை போதவற்கு என்ன காரணம்?

சொந்த மண்ணில் விளையாடுகின்றோம் என்ற எண்ணப்பாடா? அல்லது தமக்கு நன்கு பரீட்சயமான மைதானம் தானே இலகுவில் வெற்றிபெறலாம் என்ற நிலைப்பாடா? அல்லது சொந்த மண்ணில் வெற்றி பெறவில்லையே என்ற ஏக்கத்தில் விளையாடுவதனால் ஏற்படும் மன அழுத்தமா? எது எவ்வாறாயினும் டிவன்டி-20 போட்டியை பெறத்தவறையில் தாயத்தில் சிங்கங்கள் தலைத்தூக்கவில்லை என்றே கூறலாம்.

எனவே அடுத்துவரும் டிவன்டி-20 போட்டிகளிலாவது இலங்கையி அழுத்தங்களுக்கு முகம் கொடுக்காது புத்துணர்ச்சியுடன் களமிறங்கி விட்ட தவறுகளை திருத்தி வெற்றி பெர முயற்சிக்கவேண்டும்.

இதுவரையில் இலங்கை அணி வென்ற அனைத்து டிவன்டி-20 கிரிக்கட் போட்டிகளையும் தொலைக்காட்சியிலேயே பார்த்து இரசித்த இரசிகர்களில் நானும் ஒருவனாய், சொந்த மண்ணில் முதலாவது டிவன்டி-20 வெற்றியை எதிர்பார்த்தப்படி...... ஏக்கத்துடன்.....


Tuesday, September 1, 2009

காதல் வந்துவிட்டதா?

காதல் வந்தால்..........



காதலில் முதல் பிரச்சினையே காதலர்கள்தான். என்ன இப்படி சொல்லிவிட்டான் என்று யோசிக்க வேண்டாம். ஆம்! முதல் பிரச்சினை மட்டுமல்ல, கடைசிப் பிரச்சினையும் காதலர்கள்தான்.

சரி, நாம் இங்கு முதல் பிரச்சினையை முதலில் சொல்லிவிடுவோம்.

அவள் என்னைப் பார்க்கிறாள், அவன் என்னைப் பார்க்கிறான் என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் காதலர்கள் செய்ய வேண்டிய விஷயம் என்ன.



அவர்களுடனான பேச்சையோ அல்லது தொடர்பையோ உருவாக்குவதுதான்.

முதலில் அவர்களுடன் பேச முயற்சிக்க வேண்டும். பேசும்போது அவர்களது மனதில் என்ன இருக்கிறது என்பது புலனாகிவிடும்.

பிறகு தயங்காமல் காதலை வெளிப்படுத்த வேண்டும். தயங்கி தயங்கி தாமதித்தால் காதல் கல்யாணத்தில் முடியாது, உங்கள் காதலருக்கு கல்யாணம் ஆவதில்தான் முடியும்.

எனவே அவர் சொல்வார் என்று எதிர்பார்த்து ஏமாறாதீர்கள்.

பல இடங்களில் காதலை வெளிப்படுத்தாமலேயே காதல் முடிந்து விடுவது உண்டு. இதற்கு காதலர்கள்தான் காரணம்.

ஆவன் சொல்வான் என்று இவளும், இவள் சொல்வாள் என்று அவனும் தயங்கியதே காதல் விதை வளராமல் மண்ணில் மக்கிப்போவதற்கு காரணமாக இருக்கும்.

காதலை சொல்லத் தைரியம் மிக அவசியம். அதை விட காதலை சொல்லும் விதம் மிக மிக முக்கியம்.



நாம் காதலை சொல்லும் போது, அவர்களுக்கு இதுவரை காதல் வராமல் இருந்தால் கூட காதல் மலரும்படியும் மறுப்பு தெரிவிக்க முடியாதபடியும் காதலை தெரிவிக்க வேண்டும்.

நீ இல்லையேல் நான் இல்லை. என் உயிர் நீ தான் என்றெல்லாம் பழைய புராணம் பாடி காதலியின் இதயத்திற்கு பதிலாக உயிரை வாங்கிவிடாதீர்கள்.

நச்சென்று உங்கள் எண்ணத்தை பிரதிபலியுங்கள்.

அதே சமயம், நீ இருந்தால் என் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்பது போன்ற தன்னம்பிக்கை மிக்க வாக்கியங்களை உங்கள் உரையாடல் அல்லது கடிதத்தில் நிரப்புங்கள்.

காதலை சொல்ல முடிவெடுத்த பின்னர், அதனை தெளிவாக குழப்பாமல் தைரியமாக சொல்ல வேண்டும் என்பதுதான் மிக மிக முக்கியம்.

இன்று காதலைச் சொல்ல எத்தனையோ வழிகள் வந்துவிட்டன, தொலைபேசி, எஸ்எம்எஸ்கள், ஈமெயில், என உங்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.




எல்லாமே தயாராக இருந்தாலும், காதலை சொல்ல முதலில் நீங்கள்தான் தயாராக வேண்டும்.

காதலர்களுக்கு சில விஷயங்கள்

காதலிப்பவரா நீங்கள் ?





காதலர்களில் இரு வகையினர் உள்ளனர்......

பெரும்பாலும் பேசிப் பழகியப் பின்னர் காதலர்களாக மாறியவர்களும், பார்த்த மாத்திரத்திலேயே காதல் உண்டாகி காதலைத் தெரிவித்த பின் காதலர்களானவர்களும் உண்டு.
இதில் எந்த வகையாக இருந்தாலும், காதலர்கள் சில அடிப்படையான விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதாவது, காதலர்கள் எங்கு சென்றாலும் இருவரது பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளுங்கள். செல்லும் இடமும், போய் வரும் நேரமும் பாதுகாப்பானதாக இருக்கும் வகையில் அமையும்படி திட்டமிடுங்கள்.



காதலரை மற்றவர்கள் முன்பு குறைவாக மதிப்பிட்டுப் பேசாதீர்கள். இது உங்கள் காதலர் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
கருத்து வேறுபாடு ஏற்படும் போதெல்லாம் காதலரிடம் இருக்கும் குறைகளைப் பட்டியலிடாதீர்கள்.
அதற்கு பதிலாக அவரிடம் இருக்கும் நற்குணங்களை எடுத்துக் கூறி இப்படிப்பட்ட நீங்களா இதைச் சொன்னீர்கள் அல்லது செய்தீர்கள் என்று கூறினால் சற்று மேலாக இருக்கும்.

காதலரை விட நீங்கள் உயர்ந்தவர் என்ற அடிப்படையில் எந்த பேச்சும் இருக்கக் கூடாது. இருவரும் ஒரே உயிர் என்பது போன்றும், ஒருவரை ஒருவர் நம்பி வாழ்வது போன்றும் உங்கள் பேச்சு இருக்கட்டும்.
மற்றவர்களைப் பற்றிய அடிக்கடி காதலிப்பவரிடம் பேசிக் கொண்டு இருந்தால் அவர்களுக்கு சளிப்பு ஏற்பட்டுவிடும்.



இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு உங்கள் பேச்சும் செய்கையும் இருக்கட்டும்.
இவையனைத்தும் நான் இணையத்தளமொன்றில் வாசித்தவை, அவையனைத்தையும் நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்.
என்னருமை காதலர்களே நீங்களும் உங்கள் காதலர்களுடன் சந்தோசமாய் காதல் பயணத்தை தொடர என இனிய வாழ்த்துக்கள்!

வேட்டைக்காரனுக்கு விமோசனம்


வேட்டைக்காரனுக்கு விமோசனம்





இளைய தளபதி விஜய் நடித்து கடைசியாக வெளியான வில்லு, குருவி இரண்டும் சுமார் படங்கள்.

ஆதனால் அவர் தனது 49 வது படமான வேட்டைக்காரனை எப்படியாவது ஓட்டியாக வேண்டும் என்பதில் மிகுந்த எச்சரிக்கையாக செயற்படுகின்றார்.




விஜய் அடிக்கும் அரசியல் ஸ்டண்ட் கூட வேட்டைக்காரனை ஓட வைக்கத்தான் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கும் அளவுக்கு வேட்டைக்காரன் வெற்றி அவருக்கு தேவைப்படுகிறது.

கும்பிட போன தெய்வம் பைபாஸில் குறுக்கே வந்த மாதிரி வேட்டைக்காரன் வெற்றிக்கு ஒரு வழி பிறந்திருக்கிறது.

அதுதான் படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்சுக்கு படத்தை விற்றிருக்கிறார். இந்த சன்பிக்சர் நிறுவனத் எப்பாடு பட்டாவது தனது படத்தை ஓடவைத்துவிடும் என கோடம்பாக்கத்தில் பரவலாக பேசப்படும் செய்தியாகிவிட்டது.

இந்த நிறுவனம் சுமார் படங்களையே அபிரிதமான விளம்பரத்தால் சூப்பர் ஹிட்டாக்கி பலரது வயிற்றில் அமிலத்தை அள்ளி தெளித்து வருகிறது சன் பிக்சர்ஸ்.





இவர்கள் வாங்கிய அயன் கண்டபடி ஓடி கலெக்ஷனில் சாதனைப் படைத்தது யாவரும் அறிந்ததே. இப்போது வேட்டைக்காரனையும் இவர்களே வாங்கியிருக்கிறார்கள். எப்படி விளம்பரம் செய்வார்கள் என கற்பனை செய்வதே கடினாகவுள்ளது.

சன் வேட்டைக்காரனை வாங்கியதால் படம் எப்படியும் ஓடிவிடும் என்ற தெம்பு விஜய்க்கு ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு ஏற்பட்டிருக்கிறதோ இல்லையோ, அவரது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.


பேரீச்சம் பழ ரவா லட்டு

தேவையான பொருட்கள்


ரவை அரை கிலோ

பேரீச்சம்பழம் அரை கிலோ

வேர்க்கடலை 200 கிராம்

சர்க்கரை கால் கிலோ

ரின் பால் (மில்க் மெய்ட்) கால் கிலோ

நெய் தேவையானளவு


செய்முறை


முதலில் பேரீச்சம் பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். ரவையை பொன்னிறமாக வறுக்கவும்.








கடாயில் நெய்யை ஊற்றி (நெய் அதிகமாக இருந்தால் வாசனையும் நன்றாக இருக்கும்) அதில் பேரீச்சம் பழத்தையும் வேர்கடலையையும் போட்டு நன்கு வதக்கவும்.



பேரீச்சம் நன்கு மசிந்தவுடன் ரவையை பேரீச்சம்பழ கலவைக்குள் கொட்டி நன்றாக கலக்க வேண்டும். அல்லது அடுப்பிலிருந்து இறக்கியும் ரவையை போட்டு கிளறலாம்.


ரவையும்> பேரிச்சம் பழமும் நன்கு கலந்த பிறகு மில்க் மெய்டை சிறிது சிறிதாக ஊற்றி நன்றாக கலக்க வேண்டும்.


பின்னர் கடாயை இறக்கிஇ சூடு தணிவதற்குள் லட்டுகளாக பிடித்துக் கொள்ளவும்.


உடலுக்கு உகந்த பேரீச்சம் பழ ரவா லட்டு தயார்.


கூடுதலாக இனிப்பு சுவை தேவைப்படுபவர்கள்ஈ ரவை போடும் போதே சர்க்கரையும்ம் போட்டு கிளற வேண்டும். நீண்ட நாட்கள் வைத்திருக்கவும் இது உகந்தது.

Thank you : tamil.webdunia.com

Monday, August 31, 2009

சசிகுமா‌ரின் புது ஹீரோ

சசிகுமா‌ரின் புது ஹீரோ........





சசிகுமார் அடுத்து இயக்கும் படம் சென்னையை மையமாகக் கொண்டது. இந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லை. இயக்கம் மட்டும்தான்.


நாடோடிகள் படத்தில் நடித்த அனன்யா இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். சுப்பிரமணியபுரத்தைப் போலவே இந்தப் படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்கிறார் சமுத்திரக்கனி. படத்தின் ஹீரோ...?


அதுதான் ஆச்ச‌ரியம். 54 வயது நபர்தான் ஹீரோ. புதுமுகம் ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும் என சிட்டி முழுக்க தேடி வந்தனர். எவ்வளவு முயன்றும் சசிகுமார் எதிர்பார்த்த நபர் கிடைக்கவில்லையாம்.





அதனால் பசங்க, நாடோடிகள் படங்களில் நடித்த ஜெயபிரகாஷை ஹீரோவாக்கியிருக்கிறார் சசிகுமார். ஹீரோ முடிவானதால் விரைவில் படப்பிடிப்பு தொடங்கயிருக்கிறது. படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.

Thank you : tamil.webduniya.com

உ‌யி‌ரின‌ங்க‌ளி‌‌ல் ‌சில வினோதம்

உ‌யி‌ரின‌ங்க‌ளி‌‌ல் ‌சில வினோதம்.........................

பறவையின் இறகுகளின் எடை அதன் எலும்புக் கூட்டின் எடையை விட அதிகம்.

சுண்டெலிக்கு வியர்க்கவே வியர்க்காது.

ஆப்ரிக்க யானைகளுக்கு உணவை மெல்ல இருக்கும் பற்களின் எண்ணிக்கை நான்கே நான்குதான்.

மிகவும் சிறிய இதயம் கொண்ட மிருகம் சிங்கம்.

பாம்புகளுக்க ஒரு நுரையீரல் மட்டுமே உள்ளது.

ஒட்டகத்திற்கு மூன்று வயிறுகள் உள்ளன.

கட்டுல் என்ற வகை மீனுக்கு மூன்று இதயங்கள் உண்டு.

மின்னல்தாக்கி இறந்து போன மிருகங்களை மற்ற மிருகங்கள் உண்ணாது.

முள்ளம் பன்றி எலி இனத்தைச் சேர்ந்தது.

நாம் தூங்குவதை விட 50 விழுக்காடு அதிக கலோரிகள் தொலைக்காட்சி பார்க்கும் போது நம் உடல் செலவழிக்கிறது.

உங்களுக்கு தெரியுமா?

தெ‌ரி‌ந்து கொ‌ள்வோ‌ம் குழ‌ந்தைகளா..........


தினமும் நிறம் மாறும் மலை ஆஸ்திரேலியாவில் உள்ள ஐரிஸ் மலை.



உலகில் கொசு இல்லாத நாடு பிரான்ஸ்.


நமது உடலைச் சுமாராக இருபதினாயிரம் சதுர செ.மீ பரப்புள்ள தோல் மூடியிருக்கிறது.


ரத்தத்தை உற்பத்தி செய்யும் எலும்பு மஜ்ஜை 18 வயதிற்குப் பிறகுதான் பூரண வளர்ச்சி அடைகிறது.


விரல் நுனிஇ உதடுகள் போன்ற பகுதிகளில் உணர்வுத்தூண்டல் அதிகமாக இருக்கும். ஒரு சதுர அங்குலத்திற்கு 1இ300 உணர்வு முனைகள் இருப்பதே அதற்கு காரணம்.


இ‌ங்‌கிலா‌ந்து நா‌ட்டி‌ல் எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌த் தலைவரை ‌நிழ‌ல் ‌பிரதம‌ர் எ‌ன்று அழை‌க்‌கி‌ன்றன‌ர்.


இ‌ந்‌திய ‌விமான‌ப்படை அரு‌ங்கா‌ட்‌சியக‌ம் புது டெ‌ல்‌லி‌யி‌ல் அமை‌ந்து‌ள்ளது.


மலே‌சியா‌வி‌ன் தே‌சிய க‌னி ப‌ப்பா‌ளி.

விஜய்கு வந்த புதிய தலைவலி.........

>
விஜய்கு வந்த புதிய தலைவலி






தமிழ்நாட்டில் பிரபல நடிரான tp[apd; படங்களை புறக்கணிப்பது என கனடா தமிழ் சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானத்தினால் விஜய்க்கு புதுயச்சிக்கல் ஏற்பட்டுள்ளது.


சினிமா வர்த்தகத்தில் வெளிநாட்டுவாழ் ஈழத் தமிழர்களுக்கு பெரும் பங்கு உண்டு. கனடா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களை நம்பிதான் படங்களின் வெளிநாட்டு உரிமை பெரும் தொகைக்கு விற்கப்படுகிறது.


இந்நிலையில், விஜய் நடிக்கும் படங்களை புறக்கணிப்பது என கனடா தமிழ் சங்கம் அறிவித்துள்ளமையானது விஜய் படங்களின் வர்த்தகத்தை பெரிதும் பாதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.



இலங்கையில் நடத்தப்பட்ட போருக்குக்கும் தமிழர்களின் தற்போதைய நிலைமைக்கும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுதான் காரணம் என தெரிவிக்கும் அவர்கள் சோனியாகாந்திக்கு புலிகள் மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பே இதற்கு மூலக்காரணம் எனவும் கருதுகின்றனர்.


இதன் காரணமாக உலகெங்கிலும் உள்ள ஈழத் தமிழர்கள் காங்கிரஸ் கட்சின் மீது அளவுகடந்த வெறுப்புடன் உள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் காங்கிரஸ் ராகுல்காந்தியை சந்தித்து அரசியல் பற்றி விவாதித்தது ஈழத் தமிழர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கனடா தமிழ் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜய் அரசியலில் ஈடுபடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை.


ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் அவருடைய படங்களை புறக்கணிப்போம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.





ஒரு தமிழனாக இந்த அறிக்கைக்கு விஜய் மரியாதை செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதனின் சிந்தனையில்...........

மனிதனின் சிந்தனையில்...........





மனிதன் தனது கைகளைக் கொண்டு வியத்தகு பல விந்தைகளை செய்து வரும் இந்த தருணத்திலும் சிலர் இப்படியும் யோசிக்கினறனர்.


கைகளை எதற்காகவேண்டும் பயண்படுத்தாலம் என்று யோசித்தவன் இதற்காகவேனும் பயண்படுத்தாலம் என சிந்திக்க வைத்துள்ளான்.




அவனுடைய சிந்தைனையின் சில துளிகளை அள்ளி தெளிக்கின்றேன்....
ஆர்வமுடையவர்கள் இதனை முயற்சித்தும் பார்க்கலாம்.
















குழந்தைகளே உங்களுக்காக......

குழந்தைகளே உங்களுக்காக......


நம் முன்னோர்கள் குழந்தைகளுக்காக பல்வேறு கருத்துக்களையும், சிந்தனைத்துளிகளையும் காலத்திற்கும அழியாவன்னம் கொடுத்துவிட்டு போயுள்ளனர்.




இந்த சிந்தனை துளிகளும், கருத்துக்களும் ஒரேவார்த்தையில் குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் அவர்கள் கொடுத்துள்ளமையும் இங்கு சிறப்பம்சமே!

குழந்தைகளே! அவர்கள் தந்துவிட்ட இந்த பொன்மொழிகளை கற்று நீரும் வளம்பெருவீராக......

மறக்கக் கூடாதது - நன்றி
பிரியக் கூடாதது - நட்பு
உயர்வுக்கு வழி - உழைப்பு
மிக மிக நல்ல நாள் - இன்று
நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு
விலக்க வேண்டியது - விவாதம்
செய்யக் கூடியது - உதவி
செய்யக் கூடாதது - நம்பிக்கை துரோகம்
ஆபத்தை விளைவிப்பது - அதிகப் பேச்சு
நம்பக் கூடாதது - வதந்தி
கீழ்த்தரமான விஷயம் - பொறாமை
மிகவும் கொடிய நோய் - பேராசை
மிகப் பெரிய தேவை - சமயோசித புத்தி
மிகவும் வேண்டாதது - வெறுப்பு

Sunday, August 30, 2009

மனித நேயத்தின் மற்றுமொரு அவதாரமா? லாரன்ஸ்!!!!

மனித நேயத்தின் மற்றுமொரு அவதாரமா? லாரன்ஸ்!!!!




மனித நேயம் மழுங்கிப்போன இந்தக் காலத்தில் கலைஞர்கள் மனித நேயத்துடன் நடந்து கொள்வது கலையுலகத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதிலும் தமிழ்நாட்டில் இவ்வாறான மனித நேயமிக்கவர்கள் அதிகம் காணப்படுவதே தமிழன் என்று பெருமைப்படுவதற்கான முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.

'லாரன்ஸ் சாரிடபிள் ட்ரெஸ்ட்' மூலமாக ஏழைக் குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை நடத்தியிருக்கிறார் நடன இயக்குனர் லாரன்ஸ்.

இதற்காக சுதந்திர தினத்தன்று முதல்வரிடமிருந்து சிறந்த சமூக சேவகருக்கான விருதினைக் கூட பெற்றுள்ளார்.




இந்த விருதுக்கு அவர், நூறு வீதம் பொருத்தமானவர் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார்.

இந்த ட்ரெஸ்ட் மூலமாக அவர் 20 குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சையை நடத்தியுள்ளதுடன், அவர்கள் எல்லோரும் ஆறு மாதம் முதல் பன்னிரெண்டு வயது வரையுள்ள குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லாரன்ஸின் சாரிடபிள் ட்ரெஸ்ட் இதய அறுவை சிகிச்சைக்கு உதவுவதை கேள்விப்பட்டு 20 பேர் அவரை அணுகியுள்ளனர்.

இந்த விபரத்தை அவர் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றதனை தொடர்ந்து, முதல்வரும் உடனடியாக, 'முதல்வரின் இளம் சிறார் இதய அறுவை சிகிச்சை' திட்டத்தின் மூலம் இதய அறுவை சிகிச்சையளிக்க உத்தரவிட்டார்.

லாரன்ஸின் இந்த உதவியால் அந்த 20 ஏழைக் குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவுகிறது. அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் எதிர்காலத்தை நோக்கிய பயணத்துடனும் தமது வாழ்க்கையை ஆரம்பித்துள்ளனர்



.

உண்மையில் பாராட்ட வேண்டிய விடயம்தான்.

அவருடைய இந்த அளப்பரிய சேவை தொடர மனதார வாழ்த்துகின்றோம் வசதியின்றி ஏங்கும் எத்தனையோ குழந்தைகளின் வரவினை எதிர்பார்த்தபடி..............

Friday, August 28, 2009

டெஸ்ட் போட்டியில் இலங்கையனியின் வளர்ச்சி...

டெஸ்ட் போட்டியில் இலங்கையனியின் வளர்ச்சி...






வேகமாக வளர்ந்து வரும் இல்லை வளர்ந்து விட்ட டிவன்டி-20 கிரிக்கட் போட்டிகளுக்கு மத்தியில் பிரபல்யம் மற்றம் பாரம்பரியமிக்க டெஸ்ட் போட்டி அழிந்து போகுமோ என்ற நிலைமையில் டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் வளர்ச்சி என்னை பிரம்மிக்க வைக்கிறது.

டெஸ்ட் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணியின் ஆதிக்கத்தை தொடர்ந்து, தென்னாப்பிரிக்க அணியும் தமது திறமையினை நிரூபித்தே வந்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் ஒரு டெஸ்ட் போட்டியிலாவது இலங்கை அணி வெற்றி பெறுமா? என எதிர்பார்த்திருந்த நாட்கள் இன்று மலையேறி போய்விட்டது.

ஆம் இன்றைய தினத்தில் ஐ.சீ.சீ யின் டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இலங்கை அணி இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டமை இலங்கை கிரிக்கட் இரசிகர்களை மாத்திரமின்றி ஆசிய கண்டத்தின் கிரிக்கட் இரசிகர்களுக்கும் மகிழ்ச்சியாகவே இருக்கும். காரணம்; ஐ.சி.சி டெஸட் கிரிக்கட் போட்டி தரவரிசை பட்டியல்களில் ஆசிய கண்டத்தை சேர்ந்த அணியொன்று இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது இதுவே முதல் முறையாகும். அதுவும் இலங்கை அணிக்கே இரண்டாம் இடம் எனும் போது இலங்கையன் என்ற வகையில் நான் பெறுமையடைகின்றேன்.





2003 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐ.சி.சி யின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தி முடிசூடா மன்னனாக திகழ்ந்த அவுஸ்திரேலிய அணி முதன் முறையாக 4 ம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளமையானது கிரிக்கட் விளையாடும் வளாந்து வரும் நாடுகளுக்கு ஓர் உந்து சக்தியாக அமைந்துள்ளதுடன், எதிர்காலத்தில் தங்களாலும் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் பிரகாசிக்க முடியும் என்ற நம்பிக்கை விதையினையும் அவர்கள் மனதில் விதைத்துள்ளது என்றால் அது சாலப்பொருந்தும்.

இப்படி இலங்கை அணியின் அபரிதமான வளர்ச்சிக்கும், முன்னேற்றத்தற்கும் இலங்கை அணி கடந்த காலத்தில் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் காட்டிவரும் திறமையும், ஈட்டிவரும் வெற்றிகளுமே மூலக்காரணமாக அமைகின்றது.

இலங்கை அணியின் இந்த மாற்றததிற்கு என்ன காரணம் என ஆராய்ந்தால்....... இந்த மாற்றததிற்கு அணியின் தலைமைத்துவம், ஒருங்கிணைந்த செயற்பாடு, வெற்றிக்காக இறுதிவரை போராடும் குணம் என்பன முக்கிய பங்காற்றி வருகின்றது. அதிலும் அணியின் தலைமைத்துவ மாற்றம் இதில் பெரும் பங்காற்றி வருகின்றதாகவே நான் கருதுகின்றேன்.

தலைமைப் பொறுப்பேற்ற சங்ககார மிகவும் திறமையாக செயற்படுகின்றார் என்று கூறுவதை விட அதிர்ஷ்டம் அவருக்கு கைகொடுக்கிறது என்றே கூறலாம்.

சில போட்டிகளில் இக்கட்டான பல சந்தர்ப்பங்களில் அவர் தவறான முடிவெடுத்ததனையும், சில சந்தர்ப்பங்களில் அதிர்ஷ்டம் கைகொடுக்க அது சாத்தியமானதையும் நாம் கண்டுள்ளோம்.





இது ஒருபுறம் இருக்க டெஸ்ட் போட்டிகளில் இலங்கை உருவாக்கிய மற்றுமொரு அதிரடி ஆரம்பம் தான் டில்ஷான். டில்ஷானின் அதிரடியான ஆரம்பம் எதிரணியின் எதிரணியின் ஆரம்ப பந்துவீச்சு வரிசையை சீர்குழைப்பதுடன் அவர்களிடைய உளரீதியான தாக்கத்தினையும் ஏற்படுத்துகின்றது. டெஸ்ட் போட்டிகளில் மிககவனம் செலுத்தப்படவேண்டடிய ஓட்ட வேகம் என்பது இதன் மூலம் அதாவது டில்சானின் அதிரடிமூலம் அதிகரிக்க இலங்கை கணிசமான ஓட்டங்களை குவிக்க உதவுகின்றது. இதுவும் டெஸ்ட் போட்டியொன்றின் வெற்றியில் முக்கிய பாத்திரமாகின்றது.

அடுத்து நாம் கண்டிப்பாக கூறவேண்டியது திலான் சமரவீரவின் பொறுப்பான துடுப்பாட்டம். மத்தியவரிசையில் துடுப்பெடுத்தாட வரும் இவர் விக்கட்டுக்கள் வீழ்ந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்று நிதானமாக துடுப்பெடுத்தாடி அதிக ஓட்டங்களை பெறுவது இலங்கையணியின் மற்றுமொரு சக்தியாகும்.
இவர்களை விடுத்து தேவையான சந்தர்ப்பங்களில் திறமையை வெளிபடுத்தும் அணித்தலைவர் மற்றம் முன்னாள் அணித்தலைவர்களின் துடுப்பாட்டத்துடன் புதிய வரவான மெத்தியூசின் துடுப்பாட்டமும் ஓட்டங்களை பெற துணைபுரிகின்றது.

இவையனைத்தையும் தொடர்ந்து டெஸ்ட் போட்டியொன்றின் வெற்றி என்பது எதிரணியின் 20 விக்கட்டுக்களிலேயே தங்கியுள்ளதாhல், பயமுறுத்தும் பந்துவீச்சும் இலங்கையின் வெற்றியின் மற்றுமொரு பரினாமமே!. குரசேகர, துஷார வேகத்தில் மிரட்ட முரளி, மென்டிஸ் சுழலில் கலக்;க இலங்கையின் வெற்றி பயணம் தொடர்கிறது.

இருந்த போதிலும் ஒரு சிறிய வருத்தம் இன்றும் தொடர்கிறது.. தாயகத்தில் தலைமிர வைத்த சிங்கங்கள் அந்நிய மண்ணிலும் அசத்துமா? என்ற கேள்வி எம்மக்கள் மத்தியில் இன்றுவரையில் இல்லாமலில்லை.

சொந்த மண்ணில் திறமைகளை காட்டும் இலங்கை, அந்நிய மண்ணிலும் திறமையாக விளையாடி ஐ.சி.சி தரவரிசையில் முதலிடம் பெற அன்புடன் வாழ்த்தும் பல இலட்ச இரசிகர்களில் நானும் ஒருவனாய் இலங்கை அணியின் முதலிடத்தை எதிர்பார்த்தபடி.........


Wednesday, August 26, 2009

தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழனின் தலையெழுத்தோ இன்று ???????.....

தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழனின் தலையெழுத்தோ இன்று ???????....




இங்கு வாருங்கள் உங்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கப்படும்..., பயங்கரவாத பிடியிலிருந்து உங்களை மீட்டுகொள்ளுங்கள்.. நம்பிவருபவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.., யுத்தம் நிறைவடைந்து ஒரே மாதத்தில் நீங்கள் உங்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவீர்கள்...... இவை அனைத்தும் இலங்கை அரசாங்கத்தினால் வன்னி மக்களை தமது கட்டுப்பாட்டு பகுதிக்கு வரவழைப்பதற்காக அன்று பயன்படுத்திய உறுதி மொழிகள். அந்த உறுதி மொழிகள் யுத்தம் நிறைவடைந்ததாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துவிட்டநிலையிலும் வெறும் உறுதி மொழிகளாகவே இருக்கின்றன.

ஆம்! தற்போது யுத்தம் முடிந்து மாதங்கள் பல கடந்து விட்டன., ஏன் யுத்தம் நிறைவடைந்து பல தேர்தல்களும் நடந்து விட்டன, ஆனால் இடம்பெயர்ந்த மக்களோ இன்னும் அகதிகளாக..... முட்கம்பி வேலிகளுக்குள் கைதிகளாக... வாழ்கை நடத்துகின்றனர் ...இல்லை இல்லை வாழ்வைக் கடத்துகின்றனர்.

இலங்கை அரசு கூறிய உறுதி மொழிகள் எங்கே.... காற்றோடு காற்றாய் கலந்து விட்டதா? இல்லை யுத்த வெற்றியில் மறைந்துவிட்டதா? சிந்திப்பதற்கு கூட திராணியில்லாமல் அகதி மக்கள்... மறையாத யுத்த வெற்றியில் தொடந்தும் சிங்கள மக்கள்.. இது தான் இன்று வரைக்கும் இலங்கையின் குறிப்பாக தென்னிலங்ககையின் நிலைப்பாடு.
யுத்தம் முடிவடைந்து பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு விட்டது, பயங்கரவாத தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பல இரகசிய தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. ஆம் உண்மைதான் ஆனால் தமிழ் மக்களின்
எதிர்காலம்?......

நடந்தவை நடந்து முடிந்து விட்டது நடந்ததையே மீண்டும் மீண்டும் கதைப்பதால் கொல்லப்பட்ட மக்களோ, இழக்கப்பட்ட சொத்துக்களோ, மீண்டும் கிடைக்கப்போவதில்லை ஆனால் சரியான நடைமுறையினை மேற்கொண்டால் நிச்சியம் தொலைக்கப்பட்ட வாழ்க்கையில் சிறு பகுதியேனையும் மீட்டெடுத்துவிடமுடியும் என்ற நம்பிக்கை இன்னமும் விட்டுப்போய்விடவில்லை
அந்த நம்பிக்கையிலேயே இன்னும் உயிரைச் சுமந்தபடி அகதி மக்கள்... அதனை தமது அரசியலுக்காகவே பயண்படுத்தும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்.
அகதி மக்களுக்காக இன்று தென்னிலங்கையில் தற்போது பலர் குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக கடும்போக்கு கொள்கைகளைக் கொண்ட பெரும்பான்மையினர் கூட இன்று தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.

அதனை எண்ணிபார்க்கையில் எனக்கு ஆச்சரியம்தான். ஆடு நனைவதென்று ஓநாய் அழுததாம் அந்த கதையாக தமிழ் மக்களின் ஆறாத இந்த துயர்தீர்க்க தயாராகிவிட்டனர் தென்னிலங்கை அரசியல்வாதிகளில் சிலர். உண்மையாக தமிழ்மக்களுக்காக குரல் கொடுக்கும் தமிழ், சிங்கள, முஸ்லிம் அரசியல் தலைவர்களும் இருக்கின்றார்கள். அவர்களுக்கு நான் தலைவணங்குவதுடன் அவர்கள் முன்னெடுக்கும் சகல நடவடிக்கைகளும் வெற்றி பெற இறைவனையும் பிரார்த்திக்கின்றேன்.



இன்றைய நாளில் யுத்தம் நிறைவடைந்து சுமார் 100 நாட்களாகப் போகின்றது. இந்த நிலையில் இடம்பெயர்ந்த மக்களின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்வி மக்கள் மத்தியில் பெரும் ஆதங்கமாய் எழுந்துநிற்கின்றது
தற்போதைய சூழ்நிலையில் முகாம் மக்களை மீளக்குடியேற்ற தடையாக இரண்டு பிரதான காரணங்களை முன்வைக்கிறது இலங்கை அரசாங்கம்.
ஒன்று கண்ணிவெடி மற்றது முகாம்களில் இருக்கும் விடுதலை புலி உறுபு;பினர்கள்... ஆம் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணங்களே அவை ஆனாலும் ஏற்க முடியாதுள்ளது., காரணம் யதார்த்த நிலைமை...

யுத்தம் முடிவடைந்து 100 நாட்களை தொடும் இந்த வேளையில், யுத்ததின் பின்னரும் படைப்பிரிவில் ஆட்சேர்ப்பு.., வடக்கின் முக்கிய பதவிகளுக்கு இராணுவ தரப்பினரின் நியமனம், எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அகதி மக்களை சந்திப்பதற்கான தடை, ஊடகவியலாளர்களுக்கான அனுமதி மறுப்பு போன்றவிடயங்கள் இன்னும் மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை உண்டுபண்ணியுள்ளது.
தென்னிலங்கை அரசியலிலோ எதிர்கட்சிகள் 80 வீதம் கண்ணிவெடி அகற்றும் பணிகள் பூர்த்தியடைந்து விட்டதாகவும் எனவே மக்களை அந்த பகுதிகளில் மீளக் குடியேற்றும் படியும் நாளாந்தம் கூக்குரலிடுகின்றனர். இது அவர்களின் அரசியல் இலாபத்திற்காக கூறுகிறார்களோ அல்லது அகதி மக்கள் மேல் கொண்ட அனுதாபத்தினால் கூறுகிறார்களோ தெரியாது? எதுவாகினும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கிறார்கள்.




அத்துடன் அந்த பகுதிகளில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளுக்கு மத்தியில் வாழ்ந்த மக்களுக்கு 80 வீதம் கண்ணிவெடி அகற்றப்பட்ட பூமியில் வாழ்வது கடினமில்லை என்ற வாதத்தினையும் முன்வைக்கின்றனர். இது ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாகியினும் அந்த மக்களின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலைமையினையும் நாம் சிந்திக்க வேண்டும்.
விடுதலை புலிகள் அனைவரும் முற்றாக இதுவரையில் ஒழிக்கப்படவில்லை என்பதனை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும், இன்னும் சில விடுதலை புலி உறுப்பினர்கள் மக்களோடு மக்களாக கலந்துள்ளார்கள் என்ற அரசாங்கத்தின் கூற்றும் சரியானதே அதற்காக அடிப்படை வசதிகள் அறவே அற்ற நிலையில் சுமார் 3 இலட்ச மக்களும் முட்கம்பி முகாம்களுக்குள்ளே அடைத்து வைக்கப்பட்டிருப்பது மிகவும் கொடுமையானதே.
அடிப்படை வசதிகளற்ற நிலையில் உணவிற்காக, குடி நீருக்காக, மலசலம் கழிப்பதற்காக ஏன் வைத்திய உதவிகளுக்காக வரிசையில் நிற்கும் இந்த மக்கள் தற்போது மரணத்திற்காகவும் வரிசையில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்தார். அதுவே அகதி முகாமின் தற்போதைய நிலைமை எனவும் அவர் குறிப்ப்பிட்டார்.




இவ்வாறான சூழ்நிலையில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் பூர்த்தியடைந்ததும் மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டதும் இடம்பெயர்ந்த மக்களை மிக விரைவில் அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் என அரசாங்கம் தெரிவித்து வரும் இந்த சந்தர்ப்பத்தில், எப்பொழுது கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு எப்போது தாம் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவோம் என் ஏக்கத்துடனேயே அகதி மக்கள்.
இது இவ்வாறிருக்கு முகாமிற்குள்ளே நிலைமை மிகவும் மோசமாக காணப்படுகின்றனது. பிச்சை எடுத்தான் பெருமாள் அதை பிடுங்கினதாம் அனுமான் என்ற கதையாய் பாதிக்கப்பட்ட மக்களை கொண்டு பலர் பல்வேறு முறையில் பணம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டனர்.

இலங்கையிலேயே அகதி முகாம்களில் காணப்படும் கடைத் தொகுதிகளில்தான் அதிக விலைக்கு பொருட்கள் விற்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு கொடுக்கும் பால்மாவிலிருந்து அரிசி, பருப்பு என இந்த விலை கொள்ளை தொடர்கிறது. இந்த கடை உரிமையாளர்கள் பலர் இந்த 3 மாத இடைவெளியில் இலட்சாதிபதிகளாக மாறிவிட்டதாகவும் நமக்கு அறியகிடைக்கின்றது.
அது மாத்திரமா அங்கு உள்ள மக்கள் உளரீதியான பாதிப்புக்கள், மனஅழுத்தங்கள் என்பவற்றிற்கு உள்ளாகி தற்கொலை முயற்சிகளையும் மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் மக்கள் விசாரனைக்கென அழைத்து செல்லப்படுவது, பெண்கள் பாலியல் வல்லுறவிட்குட்படுத்தப்படுவது, மர்மமான முறையில் பலர் கொலை செய்யப்படுவது, போன்றன அரங்கேறும் இந்த சந்தர்ப்பத்தில் தொற்று நோயும் தொற்றிக் கொண்டது அகதி மக்களை..
இந்நிலையில் சர்வதேசம் அழுத்தம் கொடுத்தாலும் முன்வைத்த காலை பின்வைக்கப்போதில்லை என்ற நிலைப்பாட்டில் சகோதர நிறுவனம் தனது அடாவடித்தனங்களை அழகாக அரங்கேற்றி வருகின்றது. முகாம் மக்கள் வாழ்க்கை சிதைவடைந்து போயுள்ள இந்த நிலையில் அவர்களை சினம் கொண்டு பார்க்கிறது இந்த அரசு.

சர்வதேச நிதியுதவிக்காக, சர்வதேசத்தின் கண்களில் மண்ணை தூவும் முகமாக ஆங்காங்கே பொறுக்கி எடுக்கப்பட்ட சில மக்களை மீளக்குடியேற்றிவரும் அரசாங்கத்தின் திட்டம் தான் என்ன?
முகாம் மக்களை அடைத்து வைத்து கொண்டு அங்கு காணப்படும் சுமார் 1,75,000 வாக்குகளை தமக்கு சார்பாக பயண்படுத்தி கொள்வதற்காகவும், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது, குறித்த வாக்குகளை கொள்ளையடிப்பதற்காகவுமே இந்த அரசாங்கம் மக்களை தடுத்து வைத்துள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். அதுவே யதார்த்த உண்மையுமாகும்.

எது எப்படியோ இன்றை காலத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது தமது மீள்குடியேற்றம் தமிழ்மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வுமேயாகும்.
அரசியல் தீர்வை பொறுத்த வரையில் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர்தான் அரசியல் தீர்வு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாக கூறிவிட்டார். ஆகவே தீர்வு என்பது தற்போதைக்கு கிடையாது என்பது நிச்சயம்.
அதுவும் அரசியல் கபடநாடகமென்றே பல்வேறு அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். காரணம் சமாதானத்தை விரும்பும், அரசியல் தீர்வை விரும்பும் எவரும் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு வாக்களிக்கும் வாய்ப்புள்ளதால் அவர் இவ்வாறான கருத்தினை தெரிவித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எப்படியோ அவர் இப்படி கூறாதவிடத்துகூட அவர்தான் அடுத்த ஜனாதிபதி என்று எழுதப்படாத வாசகம் பொறிக்கப்பட்டுவிட்டதாகவும் பலர் நகைப்புடன் கூறுகின்றனர்.
இவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் தற்போதையஒரே எதிர்பார்ப்பு அரசியல் தீர்வு கிடைக்காவிட்டாலும் தாம் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமரவேண்டும் என்பதேயாகும். இதற்கு பெரும் தடை கண்ணிவெடிகள் இலங்கை அரசாங்கம் யாரை ஏமாற்றி எவ்வளவு பணம் பெற்றாலும் கேள்வி கேட்க முடியாத நிலையில் காணப்படும் நாங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான் அதாவது கண்ணிவெடிகள் மிக விரைவில் அகற்றப்படவேண்டும், தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவேண்டும் என்பதேயாகும்.

தமிழ் மக்களின் அரசியல் தீர்விற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் ரீதியில் போராட்டம் நடத்தும் இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் மீளக்குடியேற வேண்டும் என்பதே ஏனைய தமிழ் மக்களின் பிரதான குறிக்கோளாகும். காரணம் இப்படியே சென்றால் இல்லாத மக்களுக்காக எதற்கு தீர்வு எனவும் இன்னும் காலம் வரும் ஆகையால் தமிழ் மக்கள் இருந்தால்தான் அவர்களுக்கான தீர்வு கிடைக்கும் இல்லாத மக்களுக்கு ஏது தீர்வு ஆகவே மக்களை உயிருடனே பாதுகாத்து கொள்வதற்கு முதலில் அவர்கள், அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவேண்டும்.

நம்பிக்கை மட்டுமே தற்போது தமிழ் மக்களின் நம்பிக்கையாக இருக்கின்ற நிலையில் நாளைய தினம் குறித்த கேள்விகளுடன் ....

பெரு.சு