Showing posts with label sports. Show all posts
Showing posts with label sports. Show all posts

Wednesday, September 2, 2009

தீராத ஏக்கம் எப்போது தீரும்?



இலங்கை அணிக்கோ தனது சொந்த மண்ணில் டிவன்டி-20 வெற்றிக்கான கதவுகள் இன்னும் திறக்கப்படவில்லை.



ஆமாம் இதுவரையில் இலங்கை அணி தனது சொந்த மண்ணில் 3 டிவன்டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் முhலாவது வெற்றியை பார்த்து இரசிக்கவேண்டும் என்ற ஏக்கம் இலங்கை இரசிகர்களிடையே தொடர்ந்த வண்ணமேயுள்ளது.

கடந்த டிவன்டி-20 உலககிண்ண போட்டியில் ஒரு போட்டியிலேனும் தோல்வியுறாது இறுதி போட்டிவரை முன்னேறிய இலங்கை அணிக்கோ தமது சொந்த மண்ணில் டிவன்டி-20 போட்டியொன்றில் வெற்றியை பெறுவதென்பது எட்டாக்கணியாகவேயுள்ளது.



டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிற்பாக செயல்பட்டு வரும் இலங்கை அணி டிவன்டி-20 போட்டிகளிலும் சிறப்பாகவே விளையாடி வருகின்றது. எனினும் தாயகததில் அவர்களின் இரசிகர்கள் மத்தியில் விளையாடி முதலாவது வெற்றிக்காக இலங்கை போராடி வருகின்றமை நன்கு புலப்படுகின்றது.

டிவன்டி-20 போட்டிகளை பொறுத்தவரையில் ஒரு சிறு தவறுசெய்தாலும் அது போட்டியையே திசைதிருப்பிவிடும், டிவன்டி-20 போட்டிகளில் விடும் சிறு சிறு தவறுகளும் போட்டியின் முடிவையே மாற்றிய பல சந்தர்ப்பங்களை நாம் கண்டுள்ளோம்.

உதாரணமாக நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாது டிவன்டி-20 போட்டியில் 20 வது ஓவரின் கடைசி பந்தை நியூசிலாந்து வீரர் அடிக்கமுயள அது விக்கட்காப்பாளரின் கைளுக்கு செல்ல துடுப்பாட்ட வீரர்கள் ஓட்பெற முயற்சித்து ஓடினர் அவர்களை ரன்அவுட் செய்வதற்காக பந்தை எறிந்தார் விக்கட்காப்பாளர் குமார் சங்ககார.


அந்த பந்து விக்கட்டில் படாமல் எதிரே இருந்த களத்தடுப்பாளரையும் தான்டி செல்லவே அந்த பந்தில் மூன்று ஓட்டங்கள் பெறப்பட்டது. இந்த போட்டியிலும் இலங்கை அணி மூன்று ஓட்டங்களாலேயே தோல்வியடைந்தது.

ஆக இறுதி பந்தில் அந்த தவறிழைக்கப்படாவிட்ருந்தால் பெரும்பாலும் இலங்கைஅணி இந்த போட்டியில் வெற்றிபெற்றிருக்கும் ஆக சிறு தவறும் போட்டியின் முடிவை மாற்றும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.



இது போக அண்ணிய மண்ணில் டிவன்டி-20 போட்டிகளில் சிறப்பாக செயல்படும் இலங்கை தமது சொந்த மண்ணில் சோடை போதவற்கு என்ன காரணம்?

சொந்த மண்ணில் விளையாடுகின்றோம் என்ற எண்ணப்பாடா? அல்லது தமக்கு நன்கு பரீட்சயமான மைதானம் தானே இலகுவில் வெற்றிபெறலாம் என்ற நிலைப்பாடா? அல்லது சொந்த மண்ணில் வெற்றி பெறவில்லையே என்ற ஏக்கத்தில் விளையாடுவதனால் ஏற்படும் மன அழுத்தமா? எது எவ்வாறாயினும் டிவன்டி-20 போட்டியை பெறத்தவறையில் தாயத்தில் சிங்கங்கள் தலைத்தூக்கவில்லை என்றே கூறலாம்.

எனவே அடுத்துவரும் டிவன்டி-20 போட்டிகளிலாவது இலங்கையி அழுத்தங்களுக்கு முகம் கொடுக்காது புத்துணர்ச்சியுடன் களமிறங்கி விட்ட தவறுகளை திருத்தி வெற்றி பெர முயற்சிக்கவேண்டும்.

இதுவரையில் இலங்கை அணி வென்ற அனைத்து டிவன்டி-20 கிரிக்கட் போட்டிகளையும் தொலைக்காட்சியிலேயே பார்த்து இரசித்த இரசிகர்களில் நானும் ஒருவனாய், சொந்த மண்ணில் முதலாவது டிவன்டி-20 வெற்றியை எதிர்பார்த்தப்படி...... ஏக்கத்துடன்.....


Friday, August 28, 2009

டெஸ்ட் போட்டியில் இலங்கையனியின் வளர்ச்சி...

டெஸ்ட் போட்டியில் இலங்கையனியின் வளர்ச்சி...






வேகமாக வளர்ந்து வரும் இல்லை வளர்ந்து விட்ட டிவன்டி-20 கிரிக்கட் போட்டிகளுக்கு மத்தியில் பிரபல்யம் மற்றம் பாரம்பரியமிக்க டெஸ்ட் போட்டி அழிந்து போகுமோ என்ற நிலைமையில் டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் வளர்ச்சி என்னை பிரம்மிக்க வைக்கிறது.

டெஸ்ட் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணியின் ஆதிக்கத்தை தொடர்ந்து, தென்னாப்பிரிக்க அணியும் தமது திறமையினை நிரூபித்தே வந்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் ஒரு டெஸ்ட் போட்டியிலாவது இலங்கை அணி வெற்றி பெறுமா? என எதிர்பார்த்திருந்த நாட்கள் இன்று மலையேறி போய்விட்டது.

ஆம் இன்றைய தினத்தில் ஐ.சீ.சீ யின் டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இலங்கை அணி இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டமை இலங்கை கிரிக்கட் இரசிகர்களை மாத்திரமின்றி ஆசிய கண்டத்தின் கிரிக்கட் இரசிகர்களுக்கும் மகிழ்ச்சியாகவே இருக்கும். காரணம்; ஐ.சி.சி டெஸட் கிரிக்கட் போட்டி தரவரிசை பட்டியல்களில் ஆசிய கண்டத்தை சேர்ந்த அணியொன்று இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது இதுவே முதல் முறையாகும். அதுவும் இலங்கை அணிக்கே இரண்டாம் இடம் எனும் போது இலங்கையன் என்ற வகையில் நான் பெறுமையடைகின்றேன்.





2003 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐ.சி.சி யின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தி முடிசூடா மன்னனாக திகழ்ந்த அவுஸ்திரேலிய அணி முதன் முறையாக 4 ம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளமையானது கிரிக்கட் விளையாடும் வளாந்து வரும் நாடுகளுக்கு ஓர் உந்து சக்தியாக அமைந்துள்ளதுடன், எதிர்காலத்தில் தங்களாலும் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் பிரகாசிக்க முடியும் என்ற நம்பிக்கை விதையினையும் அவர்கள் மனதில் விதைத்துள்ளது என்றால் அது சாலப்பொருந்தும்.

இப்படி இலங்கை அணியின் அபரிதமான வளர்ச்சிக்கும், முன்னேற்றத்தற்கும் இலங்கை அணி கடந்த காலத்தில் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் காட்டிவரும் திறமையும், ஈட்டிவரும் வெற்றிகளுமே மூலக்காரணமாக அமைகின்றது.

இலங்கை அணியின் இந்த மாற்றததிற்கு என்ன காரணம் என ஆராய்ந்தால்....... இந்த மாற்றததிற்கு அணியின் தலைமைத்துவம், ஒருங்கிணைந்த செயற்பாடு, வெற்றிக்காக இறுதிவரை போராடும் குணம் என்பன முக்கிய பங்காற்றி வருகின்றது. அதிலும் அணியின் தலைமைத்துவ மாற்றம் இதில் பெரும் பங்காற்றி வருகின்றதாகவே நான் கருதுகின்றேன்.

தலைமைப் பொறுப்பேற்ற சங்ககார மிகவும் திறமையாக செயற்படுகின்றார் என்று கூறுவதை விட அதிர்ஷ்டம் அவருக்கு கைகொடுக்கிறது என்றே கூறலாம்.

சில போட்டிகளில் இக்கட்டான பல சந்தர்ப்பங்களில் அவர் தவறான முடிவெடுத்ததனையும், சில சந்தர்ப்பங்களில் அதிர்ஷ்டம் கைகொடுக்க அது சாத்தியமானதையும் நாம் கண்டுள்ளோம்.





இது ஒருபுறம் இருக்க டெஸ்ட் போட்டிகளில் இலங்கை உருவாக்கிய மற்றுமொரு அதிரடி ஆரம்பம் தான் டில்ஷான். டில்ஷானின் அதிரடியான ஆரம்பம் எதிரணியின் எதிரணியின் ஆரம்ப பந்துவீச்சு வரிசையை சீர்குழைப்பதுடன் அவர்களிடைய உளரீதியான தாக்கத்தினையும் ஏற்படுத்துகின்றது. டெஸ்ட் போட்டிகளில் மிககவனம் செலுத்தப்படவேண்டடிய ஓட்ட வேகம் என்பது இதன் மூலம் அதாவது டில்சானின் அதிரடிமூலம் அதிகரிக்க இலங்கை கணிசமான ஓட்டங்களை குவிக்க உதவுகின்றது. இதுவும் டெஸ்ட் போட்டியொன்றின் வெற்றியில் முக்கிய பாத்திரமாகின்றது.

அடுத்து நாம் கண்டிப்பாக கூறவேண்டியது திலான் சமரவீரவின் பொறுப்பான துடுப்பாட்டம். மத்தியவரிசையில் துடுப்பெடுத்தாட வரும் இவர் விக்கட்டுக்கள் வீழ்ந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்று நிதானமாக துடுப்பெடுத்தாடி அதிக ஓட்டங்களை பெறுவது இலங்கையணியின் மற்றுமொரு சக்தியாகும்.
இவர்களை விடுத்து தேவையான சந்தர்ப்பங்களில் திறமையை வெளிபடுத்தும் அணித்தலைவர் மற்றம் முன்னாள் அணித்தலைவர்களின் துடுப்பாட்டத்துடன் புதிய வரவான மெத்தியூசின் துடுப்பாட்டமும் ஓட்டங்களை பெற துணைபுரிகின்றது.

இவையனைத்தையும் தொடர்ந்து டெஸ்ட் போட்டியொன்றின் வெற்றி என்பது எதிரணியின் 20 விக்கட்டுக்களிலேயே தங்கியுள்ளதாhல், பயமுறுத்தும் பந்துவீச்சும் இலங்கையின் வெற்றியின் மற்றுமொரு பரினாமமே!. குரசேகர, துஷார வேகத்தில் மிரட்ட முரளி, மென்டிஸ் சுழலில் கலக்;க இலங்கையின் வெற்றி பயணம் தொடர்கிறது.

இருந்த போதிலும் ஒரு சிறிய வருத்தம் இன்றும் தொடர்கிறது.. தாயகத்தில் தலைமிர வைத்த சிங்கங்கள் அந்நிய மண்ணிலும் அசத்துமா? என்ற கேள்வி எம்மக்கள் மத்தியில் இன்றுவரையில் இல்லாமலில்லை.

சொந்த மண்ணில் திறமைகளை காட்டும் இலங்கை, அந்நிய மண்ணிலும் திறமையாக விளையாடி ஐ.சி.சி தரவரிசையில் முதலிடம் பெற அன்புடன் வாழ்த்தும் பல இலட்ச இரசிகர்களில் நானும் ஒருவனாய் இலங்கை அணியின் முதலிடத்தை எதிர்பார்த்தபடி.........