Sunday, August 30, 2009

மனித நேயத்தின் மற்றுமொரு அவதாரமா? லாரன்ஸ்!!!!

மனித நேயத்தின் மற்றுமொரு அவதாரமா? லாரன்ஸ்!!!!




மனித நேயம் மழுங்கிப்போன இந்தக் காலத்தில் கலைஞர்கள் மனித நேயத்துடன் நடந்து கொள்வது கலையுலகத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதிலும் தமிழ்நாட்டில் இவ்வாறான மனித நேயமிக்கவர்கள் அதிகம் காணப்படுவதே தமிழன் என்று பெருமைப்படுவதற்கான முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.

'லாரன்ஸ் சாரிடபிள் ட்ரெஸ்ட்' மூலமாக ஏழைக் குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை நடத்தியிருக்கிறார் நடன இயக்குனர் லாரன்ஸ்.

இதற்காக சுதந்திர தினத்தன்று முதல்வரிடமிருந்து சிறந்த சமூக சேவகருக்கான விருதினைக் கூட பெற்றுள்ளார்.




இந்த விருதுக்கு அவர், நூறு வீதம் பொருத்தமானவர் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார்.

இந்த ட்ரெஸ்ட் மூலமாக அவர் 20 குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சையை நடத்தியுள்ளதுடன், அவர்கள் எல்லோரும் ஆறு மாதம் முதல் பன்னிரெண்டு வயது வரையுள்ள குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லாரன்ஸின் சாரிடபிள் ட்ரெஸ்ட் இதய அறுவை சிகிச்சைக்கு உதவுவதை கேள்விப்பட்டு 20 பேர் அவரை அணுகியுள்ளனர்.

இந்த விபரத்தை அவர் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றதனை தொடர்ந்து, முதல்வரும் உடனடியாக, 'முதல்வரின் இளம் சிறார் இதய அறுவை சிகிச்சை' திட்டத்தின் மூலம் இதய அறுவை சிகிச்சையளிக்க உத்தரவிட்டார்.

லாரன்ஸின் இந்த உதவியால் அந்த 20 ஏழைக் குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவுகிறது. அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் எதிர்காலத்தை நோக்கிய பயணத்துடனும் தமது வாழ்க்கையை ஆரம்பித்துள்ளனர்



.

உண்மையில் பாராட்ட வேண்டிய விடயம்தான்.

அவருடைய இந்த அளப்பரிய சேவை தொடர மனதார வாழ்த்துகின்றோம் வசதியின்றி ஏங்கும் எத்தனையோ குழந்தைகளின் வரவினை எதிர்பார்த்தபடி..............

No comments:

Post a Comment